THANGATARAGAI
POLITICAL NEWS
Sunday, July 17, 2011
Monday, June 20, 2011
சொல்லாத காதல்-- மயூரா அகிலன்
சொல்லாத காதல் - மயூரா அகிலன் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்னை நேசிக்கிறாயா என்று…. ஒரு முறை கூட சொன்னதில்லை உன் நேசத்தை… காலத்தின் சூறாவளி நம்மை எதிரெதிரே எறிந்தது…. இரண்டு மகாமகம் கழித்து இரவு நேர ரயில் பயணத்தில் எதிர்பாராமல் சந்தித்தோம்…. நேரெதிரே இருந்தும் கூட மவுனம் மட்டுமே நம் பாஷையானது… சிலர் வாழ்க்கையில் விளையாட்டு வினையாகும்… நம் வாழ்க்கையில் விதியே விளையாடியது… நள்ளிரவு கடந்தும் கண்கள் மூடவில்லை…. ரயிலின் சப்தத்தைவிட உன் இதயத்துடிப்பின் ஓசைதான் அதிகமாய் கேட்டது… இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு அன்று விடை கிடைத்தது… நீயும் என்னை காதலித்ததை காலம் கடந்து உணர வைத்தது….. அருகம்புல்லின் மகத்துவம் “ஆல்போல் தழைத்து அருகது போல் வேரோடி” என்று மணமக்களை வாழ்த்துவது தமிழர் பண்பாடு. இத்தகைய பெருமைக்குரிய அருகம்புல் இந்தியா முழுவதும் வளரும் ஒரு புல்வகையைச் சேர்ந்தது. கரும்பச்சை நிற இலைகளைக்கொண்ட அருகம்புல் பல அடி தூரங்களுக்கு தரையடித்தண்டு, வேர்கிழங்கு மூலம் பரவி காணப்படும். தெய்வாம்சம் மிக்க புல் வீட்டுத்தோட்டத்தில் அருகம்புல்லை பயிரிடவேண்டும். விநாயகரின் விருப்பத்திற்குரிய அருகம்புல்லை விநாயகருக்குச் சமர்ப்பித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். அருகம்புல்லை தூர்வாயுக்மம் என்பார்கள். உயிரினங்களின் துன்பங்களைத் தீர்ப்பவர் விநாயகர், மக்களின் எல்லா வகையான நோய்களையும் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. எனவே இதனை விநாயகருக்கு உரியதாக சொல்கின்றனர். மருத்துவகுணம் முழுத்தாவரமும், இலைகள் மற்றும் வேர் கிழங்குகள் மருத்துவப்பயன் கொண்டவை. தாவரத்தின் தழைப்பகுதியின் சாறு சிராய்ப்புகளுக்கு பூசப்படுகிறது. இது தசை இருக்கும் தன்மை கொண்டது. இலைகளின் சாறு குளிர்ந்த தன்மையுடையது. இதனை பாலுடன் கலந்து பருகினால் மூலநோய் ரத்த கசிவு குணமாகும். சிறுநீர் கழிப்பு உறுப்புகளின் எரிச்சலை போக்கும். வேர்களை அரைத்து தயிரில் கலந்து பருகினால் புறமேக நோய் குணமாகும். சிட்டுக்குருவியின் நீதிக்கதை அமைதியாய் இருந்தால் பாதிப்பில்லை குளிர் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட சிட்டுக்குருவி ஒன்று தன் இனத்தோடு வாழ்ந்து வந்தது. இலையுதிர் காலத்தின் இறுதிக்கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசையை நோக்கி பறக்க ஆரம்பித்தன. ஆனால் இந்த இளம் சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாது என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோசத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கி விட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து அந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததால் அது மரத்தில் இருந்து கீழே ஒரு விவசாயி வீட்டு முற்றத்தில் விழுந்தது. அப்போது அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்தச் சிட்டுக்குருவி மீது சாணத்தை போட்டுவிட்டு சென்றது. இதில் சிட்டுக்குருவிக்கு மூச்சுத்திணறினாலும், சாணத்தின் வெப்பம் குளிருக்கு இதமாக இருந்தது. சூட்டினாலும், மூச்சுவிட முடிந்ததாலும், மகிழ்ச்சியடைந்த அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது. பாட்டுச்சத்தம் கேட்டு அந்தப்பக்கமாக வந்த பூனை சத்தம் திசையை மோப்பம் பிடித்து சாணத்தை விலக்கிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் சந்தோசமாக அதனை விழுங்கிவிட்டது. இந்த கதை கூறும் மூன்று நீதிகள் 1) உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 2) உன்னை சாணத்தில் இருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. 3) நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் <span style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;" lang="EN-U | |
Reply | Reply to all | Forward | Print | Delete | Show original |
![]() Jayalakshmi Subramani<jayalakshmisubbu@gmail.com> | Fri, Jun 17, 2011 at 6:19 PM |
To: aniz.aniz2011@gmail.com | |
Reply | Reply to all | Forward | Print | Delete | Show original | |
3) நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால் வாயை மூடிக்கொண்டிரு.
|
Friday, June 17, 2011
இலைகளும் மருத்துவ குணங்களும் - மயூரா அகிலன்
இலைகளும் மருத்துவ குணங்களும்
உணவை ஜீரணிக்கும் கரிவேப்பிலை
‘ கறிவேப்பிலைக் கொத்தாக பயன்படுத்திக்கொண்டான் ’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
இந்திய உணவுகளில் வாசனைக்காக அதிகம் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது மனித உடலில் சீரண மண்டலத்தை தூண்டும் வேதிப்பொருளாக செயல்படுகிறது. இதனால் உணவானது உடலில் நன்கு செரிமானமாகி சத்துக்கள் கிரகித்துக்கொள்ளப்படுகின்றன. மருந்துப் பொருளாகப் பயன்படும் கரிவேப்பிலையை பற்றி சில தகவல்கள் :
வளரும் இடம்
தென்கிழக்கு ஆசியாவின் மித வெப்ப காடுகளைச் சேர்ந்த கரிவேப்பிலை இந்தியாவில் பரவலாக எல்லாப் பகுதிகளிலும் இதன் இலைகளுக்காக பயிரிடப்படுகிறது.
வேதிப்பொருட்கள்
கறிவேப்பிலையில் 20-க்கும் மேற்பட்ட ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் டேனின்கள் உள்ளன. கொனிம்பைன், கெடிசினி உள்ளிட்ட வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.
மருத்துவ பயன்
கரிவேப்பிலையின் இலைகள், மற்றும் வேர்ப்பட்டை, கனிகள் போன்றவை பயன் உடையவை. இலையின் வடிநீர் வயிற்றுப்போக்கு, வாந்தி, சீதபேதிக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது. கசக்கிய இலைகளை தோல் வீக்கங்களுக்கு பற்றுப்போட பயன்படுத்தலாம்.
வேர்ப்பட்டை சிறுநீரகங்களின் வலி போக்கும் தன்மையுடையது. கனிச்சாறு எலுமிச்சை சாறுடன் கலந்து பூச்சிக் கடிகளை குணப்படுத்த மேல் பூச்சாகிறது.
உணவின் பயன்படும் கறிவேப்பிலை
தமிழ்நாட்டு சமையலின் முடிவில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டினால்தான் அந்த உணவு முற்றுப்பெறுகிறது. உணவுகளுக்கு மணமூட்டியாக பயன்படும் இந்த கறிவேப்பிலையில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் உணவில் கலந்து விடும். உணவில்பொருளில் வேண்டாத பொருளைப்போல இதனை எடுத்து கீழே போட்டு விடுபவர்களும் உண்டு.
கறிவேப்பிலை இலையை துவையல் செய்தும் சப்பிடலாம். பித்த நரையை போக்கும் தன்மையுடையது என்கின்றனர் மருத்துவர்கள்
எனக்கென நீ வந்தாய் ….
- மயூரா அகிலன்
என் உயிரில் கலந்தவனே !
சூரியனை நான் கேட்டேன்….
குளிர் நிலவாய் நீ வந்தாய் !
கோடையை நான் கேட்டேன்….
வசந்தமாய் நீ வந்தாய் !
பாலையை நான் கேட்டேன்….
சோலையென நீ வந்தாய் !
கடும் மழையை நான் கேட்டேன்….
தூவானமாய் நீ வந்தாய் !
வண்ணங்களை நான் கேட்டேன்….
உணவை ஜீரணிக்கும் கரிவேப்பிலை
‘ கறிவேப்பிலைக் கொத்தாக பயன்படுத்திக்கொண்டான் ’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
இந்திய உணவுகளில் வாசனைக்காக அதிகம் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது மனித உடலில் சீரண மண்டலத்தை தூண்டும் வேதிப்பொருளாக செயல்படுகிறது. இதனால் உணவானது உடலில் நன்கு செரிமானமாகி சத்துக்கள் கிரகித்துக்கொள்ளப்படுகின்றன. மருந்துப் பொருளாகப் பயன்படும் கரிவேப்பிலையை பற்றி சில தகவல்கள் :
வளரும் இடம்
தென்கிழக்கு ஆசியாவின் மித வெப்ப காடுகளைச் சேர்ந்த கரிவேப்பிலை இந்தியாவில் பரவலாக எல்லாப் பகுதிகளிலும் இதன் இலைகளுக்காக பயிரிடப்படுகிறது.
வேதிப்பொருட்கள்
கறிவேப்பிலையில் 20-க்கும் மேற்பட்ட ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் டேனின்கள் உள்ளன. கொனிம்பைன், கெடிசினி உள்ளிட்ட வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.
மருத்துவ பயன்
கரிவேப்பிலையின் இலைகள், மற்றும் வேர்ப்பட்டை, கனிகள் போன்றவை பயன் உடையவை. இலையின் வடிநீர் வயிற்றுப்போக்கு, வாந்தி, சீதபேதிக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது. கசக்கிய இலைகளை தோல் வீக்கங்களுக்கு பற்றுப்போட பயன்படுத்தலாம்.
வேர்ப்பட்டை சிறுநீரகங்களின் வலி போக்கும் தன்மையுடையது. கனிச்சாறு எலுமிச்சை சாறுடன் கலந்து பூச்சிக் கடிகளை குணப்படுத்த மேல் பூச்சாகிறது.
உணவின் பயன்படும் கறிவேப்பிலை
தமிழ்நாட்டு சமையலின் முடிவில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டினால்தான் அந்த உணவு முற்றுப்பெறுகிறது. உணவுகளுக்கு மணமூட்டியாக பயன்படும் இந்த கறிவேப்பிலையில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் உணவில் கலந்து விடும். உணவில்பொருளில் வேண்டாத பொருளைப்போல இதனை எடுத்து கீழே போட்டு விடுபவர்களும் உண்டு.
கறிவேப்பிலை இலையை துவையல் செய்தும் சப்பிடலாம். பித்த நரையை போக்கும் தன்மையுடையது என்கின்றனர் மருத்துவர்கள்
எனக்கென நீ வந்தாய் ….
- மயூரா அகிலன்
என் உயிரில் கலந்தவனே !
சூரியனை நான் கேட்டேன்….
குளிர் நிலவாய் நீ வந்தாய் !
கோடையை நான் கேட்டேன்….
வசந்தமாய் நீ வந்தாய் !
பாலையை நான் கேட்டேன்….
சோலையென நீ வந்தாய் !
கடும் மழையை நான் கேட்டேன்….
தூவானமாய் நீ வந்தாய் !
வண்ணங்களை நான் கேட்டேன்….
Wednesday, June 15, 2011
இன்னொரு தலைமுறையாவது ……. - மயூரா அகிலன் அமைதிப் பூங்கா !. இது எங்க தெருவோட பேரு. அப்படி ஒரு பேரு வந்ததுக்கு காரணமே இங்க அடிக்கடி சண்டை, சச்சரவு நடக்கிறதுனாலதான் எங்க தெரு எளவட்டப் பயளுங்கல்லாம் சேர்ந்து அப்படி ஒரு பேரு வச்சிட்டானுங்க. அன்னைக்கும் வழக்கம் போல சச்சரவோடத்தான் விடிஞ்சது. யார் வீட்டுல என்ன பிரச்சினையோன்னு ஆளாளுக்கு விசாரிச்சிட்டு இருக்கப்ப பிரச்சனை யார் வீட்டுலையும் இல்லை தெரு முனையில இருக்கிற வீர நாகம்மன் கோயில்தான்னு தெரிய வந்துச்சு. எல்லோரும் கோயிலை பார்த்த படியே பேசிட்டு இருந்தாங்க. யாரும் உள்ள போன மாதிரி தெரியலை. எதுன்னாலும் ஆகாசத்துக்கும், பூமிக்கும் குதிக்கிற எளவட்டப் பசங்களும் அன்னைக்கு அமைதியா நின்னு குசு குசுன்னு பேசிட்டு இருந்தாங்க. எனக்கோ பொறுக்க முடியல. மெல்ல அந்த பயலுக பக்கத்துல போயி மெதுவா பேச்சுக்கொடுத்தேன் டேய் என்னாங்கடா ஆச்சு ? ஏன் எல்லோரும் கோயிலப்பாத்து பேசிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன். அதுக்கு நமட்டு சிரிப்பு சிரிச்ச ஒரு பய “ இதப்பார்றா, ஆல் இந்தியா ரேடியோ பாட்டிக்கே விசயம் தெரியாதான்னு” கேட்டான். எனக்கு வந்த கோவத்த அடக்கி கிட்டு , “ நக்கல் பேச்ச விட்டுட்டு விசயத்தை சொல்லுங்கடான்னு” கேட்டேன். அதுக்கு அந்த பயலுக சொன்னது என் தலையில இடியா எறங்கிச்சு. பெரிய வீட்டுப் பொண்ணு பிரேமா, கீழ் சாதிக்கார பயலை கட்டிக்கிருச்சின்னு பயலுக சொன்னதை என்னால நம்பவே முடியவே. இருந்தாலும் ஊரே கூடி பேசுறப்ப நம்பாம இருக்கவும் முடியல. அது சரிடா அதுக்கு எதுக்கு எல்லோரும் வீரநகம்மா கோயில் வாசல்ல காத்துக் கெடக்கீங்கன்னு. மறுபடியும் அவங்க கிட்ட கேட்டேன். ஆங்…. கல்யாண ஜோடி இப்ப கோயிலுக்குள்ளதான் இருக்குன்னு சொல்லிட்டு மறுபடியும் பயலுக அவங்களுக்குள்ளயே பேசிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. யாரும் கோயிலுக்குள்ள போன மாதிரி தெரியலை. நான் மெதுவா கோயில் முன் வாசல்ல நின்னு எட்டிப் பாத்தேன். ஆம்பளையும், பொம்பளையுமா சேர்ந்து மொத்தம் ஏழெட்டு பேரு இருந்தாக. தெனமும் வேலைக்கு போறப்ப என்ன பாட்டி சவுக்கியமான்னு கேட்டுட்டு போற பிரேமா தலைய குனிஞ்சி உட்காந்துட்டு இருந்தா. அவள கட்டிக்கிட்ட பய புள்ள சிநேகித பசங்களோட பேசிட்டு இருந்தான். நான் எட்டிப் பாக்குறத பாத்துட்டு பேச்சை நிப்பாட்டிட்டு என்னைவே எல்லாரும் பாத்தாங்க. அதுக்குள்ள பின்னாடி இருந்த பயளுங்க எல்லாம் கொரலு கொடுத்தாங்க. ஏய் பாட்டி, நாங்களே ஊர் பஞ்சாயத்தாளுங்க வரட்டும்னு தானே வாசல்ல நிக்கிறோம், நீ என்னத்தை நாட்டாமை செய்யப்போற பேசமா ஒன் வீட்டு திண்ணையில போயி உட்காருன்னு கத்துனாங்க பயளுக. நா எதுவும் பேசாம திண்ணைய பார்த்து நடந்தேன். என் மனசு 50 வருசத்துக்கு பின்னோக்கி போச்சு. அன்னைக்கு நடந்த விசயத்தை இப்ப நினைச்சா கூட மனசல்லாம் ரணமா வலிக்குது. பருவ வயசுக் கோளறுல வர்ற காதல் எனக்கும் வந்துச்சு. அத காதல்னு சொல்றதை விட அன்புக்கு ஏங்குன மனசுக்கு கொடுத்த அடைக்கலம்னு தான் சொல்லனும். கருப்பா இருக்கிறவங்க மத்தியில செக்கச் செவேல்னு இருந்த மணி என் மனசுல நுழைஞ்சிட்டான். அப்ப எங்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு டென்ட் கொட்டகையும், சந்தைப்பேட்டையில போட்ட பாவுக்கூத்தும்தான் படம் பாக்குறதை விட்டுட்டு ஒருத்தருக் கொருத்தர் பாத்துக்கிட்டே பொழுத ஓட்டுனோம். நல்லா போன எங்க வாழ்க்கையில நச்சுப் பாம்பா நுழைஞ்சா பெரிய வீட்டுப்பையன் காளியப்பன். அவனுக்கு எப்பவுமே எம்மேல ஒரு கண்ணு இருந்துச்சு. ஒருநாள் நா பம்பு செட்டுல குளிக்கப் போனப்ப என் கைய பிடிச்சு இழுத்தான். நா பயந்து கத்தவும், அந்த சத்தத்தை கேட்டு அங்க வந்த மணி, உடனே காளியப்பன் முகத்தப் பாத்து ஒரு குத்து விட்டார். எனக்கு மயக்கம் வந்து நான் விழுந்துட்டேன். எந்த விசயம் ஊருக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிரும்னு பயந்து கெடந்தோனோ அது நடந்துருச்சி. அடிபட்ட காளியப்பன் ஊருக்குள்ள போயி விசயத்தையே மாத்திச்சொல்லி பஞ்சாயத்தை கூட்டிட்டான். ஆளாளுக்கு ஒரு பேச்சு. எங்க பக்கத்து நியாயத்தை கேட்க யாருமில்லை. சின்ன சாதிப்பயலோட இந்த ஓடுகாலி கம்மாக்கரையில கொலாவிக்கிட்டு இருந்தான்னு காளியப்பன் சொன்னதை ஊரு சனம் மொத்தமும் நம்பிச்சு. கடைசில அவன் சொன்னதுதான் உண்மையாச்சு. என்னைய காப்பாத்துன மணியை ஊரை விட்டே வெரட்டுனாங்க. எனக்கு மொட்டையடிச்சு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்தி ஊர்வலமா கொண்டு போனங்கா. அப்ப என்னோட முதுகுல பளேர்னு ஒரு அடி கொடுத்தான் காளியப்பன். அன்னைக்கு என்னைய அவன் அடிச்ச அடி, அவன் தலையில இன்னைக்கு இடியா எறங்கியிருக்கு. அதே பெரிய வீட்டு காளியப்பனோட பேத்தி தான் இன்னைக்கு வேற சாதிப்பயலை கல்யாணம் கட்டிக்கிட்டு வந்திருக்கா. அன்னைக்கு ஊரே பஞ்சாயத்து பேசி நடக்காத ஒரு விசயத்துக்கு எனக்கு அநியாயமா தீர்ப்பு சொன்னாங்க. இன்னைக்கு அதே ஊரு சனம் என்ன தீர்ப்பு சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு நிக்குது. பஞ்சாயத்துக்காரங்க மெதுவா பேச ஆரம்பிச்சாங்க. “ என்னப்பா, இப்படி ஒருத்தருக்கொருத்தர் பார்த்துட்டு நின்னா என்ன அர்த்தம். விவகாரம் வீதிக்கு வந்திருச்சி, தீர்ப்பு சொல்ல வேண்டியவரே தலைகுனிஞ்சி நிக்கிறாரு. பேச வேண்டியதை பேசுனாத்தானே வெவகாரம் முடியும்” அப்படின்னு ஒரு பெரிசு அடி எடுத்து கொடுத்துச்சு. இதுல பேசுறதுக்கு ஒண்ணுமில்லைங்க. அவ கழுத்துல கட்டியிருக்கிற தாலிய கழட்டி கொடுத்துட்டு அவனோட எந்த ஒறவுமில்லைன்னு எழுதி தரச்சொல்லுங்கன்னு பெரிய மனுசன் காளியப்பன் சொன்னான். இதக்கேட்டு யாருக்கும் பேச்சு வரலை. ஏன்னா இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் காளியப்பன் என்ன தீர்ப்பு கொடுப்பார்னு ஊருக்கே தெரியுமே. தப்பு பண்ணினது தன்னோட பேத்திங்கிறதுனால பழசை மறந்துட்டு பேசுனான் காளியப்பன். நான் மெதுவா பஞ்சாயத்தார பாத்து போனேன். என்னப்பார்த்துட்டு அவன் புருவத்தை சுருக்கினான். ஏன்னா அவனுக்கு மட்டுந்தானே உண்மை தெரியும். பஞ்சாயத்துல நா என்ன பேசப்போறேன்னு கேட்குறதுக்கு எல்லோரும் ஆவலா காத்துட்டு இருந்தாங்க. ஊர் தலைங்க என்ன பேச அனுமதிக்கணும் கேட்டுட்டு நா பேச ஆரம்பிச்சேன். இதே பஞ்சாயத்தால இரண்டு தலைமுறையா என்மனசுல பட்ட வலி ஆறலை.அதே மாதிரி இந்த பொண்ணோட மனசுலயும் ஆறாத வடுவை ஏற்படுத்திடாதிங்க. சாதி, மதம்னு பாத்து கழட்டி வீசுறத விட அந்த பையனை மனுசன்னு மட்டும் பார்த்து மனசைக்கொடுத்தாலே பிரேமா, அவளை வாழவிடுங்க…. அவங்க நினைச்சிருந்தா எங்கயாவது போயிருக்க முடியும். நம்ம ஊரு கட்டுப்பாடு தெரிஞ்சும் இங்க வந்திருக்காங்கன்னா அவங்க சொல்ல வர்றதை எல்லாரும் காது கொடுத்து கேட்கணும்னு சொன்னேன். காளியப்பனால ஒண்ணும் பேச முடியல. பிரேமா என்ன சொல்லப்போறான்னு எல்லாரும் அவளையே பார்த்துட்டு இருந்தாங்க. அது வரைக்கும் அமைதியா இருந்த பிரேமா மொத தடவையா வாயை தொறந்தா. உங்க யார் கிட்டையும் சம்மதம் கேட்காம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு எல்லோரும் எங்களை மன்னிக்கனும்னு ஆரம்பிச்சா. அம்பது வருசத்துக்கு முன்னாடி செய்யாத குத்தத்துக்கான்
Monday, June 13, 2011
Sunday, June 12, 2011
வத்தள குண்டு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி
வத்தள குண்டு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இட நெருக்கடி மிகுந்த வத்தள குண்டு வின் முக்கிய தொழில் ஹோட்டல் தொழிலாகும், இதன் காரணமாக ஹோட்டல் தொழிலதிபர்கள் தங்கள் ஹோட்டல் முன்பு பேருந்துகளை நிறுத்துகின்றனர் இதன் காரணமாக நெருக்கடி ஏற்படுகிறது. காவல் துறை காவலர்களை அதிக படுத்தி நெருக்கடி இல்லாமல் ஆக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)