செய்தியே சுவாசமாய்...

நேற்றைய வரலாறு - இன்றைய நிதர்சனம் - நாளைய நம்பிக்கை

Monday, June 20, 2011

சொல்லாத காதல்-- மயூரா அகிலன்

சொல்லாத காதல்


-    மயூரா அகிலன்





எத்தனை முறை கேட்டிருப்பேன்

என்னை நேசிக்கிறாயா என்று….

ஒரு முறை கூட

சொன்னதில்லை உன் நேசத்தை

காலத்தின் சூறாவளி

நம்மை எதிரெதிரே எறிந்தது….

இரண்டு மகாமகம் கழித்து

இரவு நேர ரயில் பயணத்தில்

எதிர்பாராமல் சந்தித்தோம்….

நேரெதிரே இருந்தும் கூட

மவுனம் மட்டுமே நம் பாஷையானது

சிலர் வாழ்க்கையில்

விளையாட்டு வினையாகும்

நம் வாழ்க்கையில்

விதியே விளையாடியது

நள்ளிரவு கடந்தும்

கண்கள் மூடவில்லை….

ரயிலின் சப்தத்தைவிட

உன் இதயத்துடிப்பின் ஓசைதான்

அதிகமாய் கேட்டது

இது நாள் வரை

புரியாமல் இருந்த புதிருக்கு

அன்று விடை கிடைத்தது

நீயும் என்னை காதலித்ததை

காலம் கடந்து உணர வைத்தது…..






அருகம்புல்லின் மகத்துவம்





ஆல்போல் தழைத்து அருகது போல் வேரோடிஎன்று மணமக்களை வாழ்த்துவது தமிழர் பண்பாடு.

இத்தகைய பெருமைக்குரிய அருகம்புல் இந்தியா முழுவதும் வளரும் ஒரு புல்வகையைச் சேர்ந்தது.

கரும்பச்சை நிற இலைகளைக்கொண்ட அருகம்புல் பல அடி தூரங்களுக்கு தரையடித்தண்டு, வேர்கிழங்கு மூலம் பரவி காணப்படும்.



தெய்வாம்சம் மிக்க புல்



வீட்டுத்தோட்டத்தில் அருகம்புல்லை பயிரிடவேண்டும். விநாயகரின் விருப்பத்திற்குரிய அருகம்புல்லை விநாயகருக்குச் சமர்ப்பித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். அருகம்புல்லை தூர்வாயுக்மம் என்பார்கள். உயிரினங்களின் துன்பங்களைத் தீர்ப்பவர் விநாயகர், மக்களின் எல்லா வகையான நோய்களையும் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. எனவே இதனை விநாயகருக்கு உரியதாக சொல்கின்றனர்.



மருத்துவகுணம்



முழுத்தாவரமும், இலைகள் மற்றும் வேர் கிழங்குகள் மருத்துவப்பயன் கொண்டவை.

தாவரத்தின் தழைப்பகுதியின் சாறு சிராய்ப்புகளுக்கு பூசப்படுகிறது. இது தசை இருக்கும் தன்மை கொண்டது.

இலைகளின் சாறு குளிர்ந்த தன்மையுடையது. இதனை பாலுடன் கலந்து பருகினால் மூலநோய் ரத்த கசிவு குணமாகும். சிறுநீர் கழிப்பு உறுப்புகளின் எரிச்சலை போக்கும்.

வேர்களை அரைத்து தயிரில் கலந்து பருகினால் புறமேக நோய்  குணமாகும்.





சிட்டுக்குருவியின் நீதிக்கதை



   அமைதியாய் இருந்தால் பாதிப்பில்லை



குளிர் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட சிட்டுக்குருவி ஒன்று தன் இனத்தோடு  வாழ்ந்து வந்தது. இலையுதிர் காலத்தின் இறுதிக்கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசையை நோக்கி பறக்க ஆரம்பித்தன. ஆனால் இந்த இளம் சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாது என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.

குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோசத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கி விட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து அந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததால் அது மரத்தில் இருந்து கீழே  ஒரு விவசாயி வீட்டு முற்றத்தில் விழுந்தது.

அப்போது அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்தச் சிட்டுக்குருவி மீது சாணத்தை போட்டுவிட்டு சென்றது. இதில் சிட்டுக்குருவிக்கு மூச்சுத்திணறினாலும், சாணத்தின் வெப்பம் குளிருக்கு இதமாக இருந்தது.

சூட்டினாலும், மூச்சுவிட முடிந்ததாலும், மகிழ்ச்சியடைந்த அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது. பாட்டுச்சத்தம் கேட்டு அந்தப்பக்கமாக வந்த பூனை சத்தம் திசையை மோப்பம் பிடித்து சாணத்தை விலக்கிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் சந்தோசமாக அதனை விழுங்கிவிட்டது.

இந்த கதை கூறும் மூன்று நீதிகள்

1)   உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2)   உன்னை சாணத்தில் இருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.

3)   நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் <span style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-US;" lang="EN-U
Reply | Reply to all | Forward | Print | Delete | Show original

Add star 

Jayalakshmi Subramani

<jayalakshmisubbu@gmail.com>
Fri, Jun 17, 2011 at 6:19 PM
To: aniz.aniz2011@gmail.com
3)   நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால் வாயை மூடிக்கொண்டிரு.

 
 
 
 
 
 
3)   நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாய், சாணத்தின் இதமான <span style="fon

No comments:

Post a Comment